தஞ்சாவூர்

ரயிலில் அடிபட்டு மெக்கானிக் சாவு

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற ஏ.சி. மெக்கானிக் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். 

DIN

பாபநாசம் அருகே ஞாயிற்றுக்கிழமை தண்டவாளத்தை கடக்க முயன்ற ஏ.சி. மெக்கானிக் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். 
அய்யம்பேட்டை காவல் சரகம், சூலமங்கலம் புதுத் தெருவை சேர்ந்த கலியமூர்த்தி மகன் சுகன் (19) ஏ.சி. மெக்கானிக். இவர் சூலமங்கலத்திலிருந்து அய்யம்பேட்டைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பசுபதிகோவில் ரயில் நிலையம் அருகே ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றபோது இவர் மீது அந்த வழியாக சென்ற திருச்சி-மயிலாடுதுறை பயணிகள் ரயில் மோதியது. இதில் சுகன் காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு சென்ற  தஞ்சாவூர் ரயில்வே சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மரியதாஸ் உள்ளிட்ட போலீஸார்,  சுகனின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அய்யம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிங்கம், புலி, கோட் மெஸ்ஸி! புகைப்படங்கள்!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! பிகார் முதல்வருக்கு பாக். நிழல் உலக தாதா மிரட்டல்? பாதுகாப்பு அதிகரிப்பு!

ஈரானின் ஹோர்முஸ் தீவில் மழை! செந்நிறமாக மாறிய கடல்!

இந்த வார ஓடிடி படங்கள்!

உலகின் மிகப்பெரிய சிலையின் சிற்பி ராம் வி சுதார் 100 வயதில் காலமானார்!

SCROLL FOR NEXT