தஞ்சாவூர்

திருவையாறில் தமிழிசை விழா தொடக்கம்

DIN

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அரசர் கல்லூரித் திடலில் தமிழிசை மன்றம் சார்பில் 48 ஆம் ஆண்டு தமிழிசை விழா செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
கல்யாணபுரம் கணேசன் குழுவினரின் மங்கள இசையுடன் தொடங்கிய இந்த விழாவில் இலுப்பக்கோரை திருமாறனின் திருமுறை விண்ணப்பமும், பூங்குடி மணிவண்ணன் பாட்டு நிகழ்ச்சியும், திருத்தணி சுவாமிநாதன் குழுவினரின் திருமுறை இன்னிசை நிகழ்ச்சியும், பாடகி நித்யஸ்ரீ மகாதேவனின் தமிழிசை (பாட்டு) நிகழ்ச்சியும் நடைபெற்றன. பின்னர், இரவு 9 மணிக்கு நடைபெற்ற தொடக்க விழாவுக்குத் தமிழிசை மன்றத் தலைவர் ம. வேலு மாவலியார் தலைமை வகித்தார்.  வேளாண்மைத் துறை அமைச்சர் இரா. துரைக்கண்ணு குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடக்கி வைத்தார்.  
மக்களவை உறுப்பினர் கு. பரசுராமன், கலை, பண்பாட்டுத் துறை இணை இயக்குநர் இரா. குணசேகரன் உள்ளிட்டோர் விழாவில் பங்கேற்றனர். இதையடுத்து, கல்யாணபுரம் சீனிவாசன் குழுவினரின் பெருவங்கிய இசை நிகழ்ச்சியும், நாகை பாலகுமார் குழுவினரின் நாட்டிய நாடக நிகழ்ச்சியும் நடைபெற்றது. இரண்டாம் நாளான புதன்கிழமை மாலை களிமேடு கழுமங்கலம் அப்பரவை சிவகுமார், புனல்வாயில் செளந்தரராஜனின் திருமுறை, திருவையாறு பாலகணபதி வித்யாசாலா மாணவிகளின் பாட்டு, திருச்சி கிருஷ்ணசாமி மிருதங்கப் பள்ளி மாணவர்களின் மிருதங்க சங்கமம், ராஜேசுவரி குழுவினரின் சேர்ந்திசை, சென்னை அபிஷேக் ரகுராமின் பாட்டு, நாஞ்சில் சம்பத்தின் ஆன்மிக உரை, இரவு நகைச் சுவைக் கொண்டாட்டம் ஆகியவை நடைபெற்றன. 
நிறைவு நாளான வியாழக்கிழமை (ஜன.17) திருவையாறு இராம. வேலாயுதம் பழனிநாதன், கெளரி நாகராஜனின் திருமுறை, திருவையாறு ஆர். சுந்தரி லெட்சுமணனின் பாட்டு, சதீஷ்கிருஷ்ணா, ஆர்.பி. ஹரிணி பாட்டு, தஞ்சை பிலகரி சுந்தர வர்மா பாட்டு, அருண் சண்முகத்தின் பாட்டு, திருவான்மியூர் விஜயலட்சுமி சுப்பிரமணியத்தின் பாட்டு, திரைப்படப் பாடகி ஜெயஸ்ரீ குழுவினரின் இன்னிசை, தஞ்சாவூர் டி.ஆர். கோவிந்தராஜனின் லய நாத இன்பம் நிகழ்ச்சியும், இரவு  மதுரை த. கோவிந்தராஜன் குழுவினரின் கிராமிய நிகழ்ச்சியும் நடைபெற உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT