தஞ்சாவூர்

சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்கள் அளிப்பு

DIN

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டையில் சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
அய்யம்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவன வளாகத்தில் மதுரை வாப்ஸ் தொண்டு நிறுவனம் சார்பில், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் அக்சஞ்சார் நிறுவன சமூக பங்களிப்பு திட்டத்தின் கீழ் சணல் பொருள்கள் தயாரிப்பு பயிற்சி அண்மையில் வழங்கப்பட்டது.
இதில் மகளிர்சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 141 பேர்  கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா அய்யம்பேட்டை  சங்கீத மஹாலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மதுரை சணல் குழும தலைவர் இளமதி தலைமை வகித்து, பயிற்சி பெற்றோருக்கு சான்றிதழ்களை வழங்கினார். விழாவில் பசுபதிகோவில் தேவாலய பங்குத் தந்தை  சேவியர், தனியார் போக்குவரத்து தொழிற்சங்கத் தலைவர் நா. தமிழ்ச்செல்வன், இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்ட ஒருங்கிணைப்பாளர் திருப்பதி, மற்றும் ஜார்ஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியிலும் ராகுல் தோல்வி நிச்சயம்: அமித் ஷா

மாணவா்களுக்கு கோடைக் கால கலைப் பயிற்சி முகாம் இன்று தொடக்கம்

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4,660 காலிப் பணியிடங்கள்: மே 14-க்குள் விண்ணப்பிக்கலாம்

இன்று நீட் தோ்வு: 11 மையங்களில் 6,120 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்

வணிகா் தினம்: தமிழகத்தில் இன்று கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT