தஞ்சாவூர்

சாலையில் வீசப்பட்ட 60 பவுன் நகைகள்

DIN

தஞ்சாவூரைச் சேர்ந்தவர் சங்கமித்திரை. இவர் மகளின் திருமணம் தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலை செல்வம் நகரில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
முன்னதாக, பெண் வீட்டார் சனிக்கிழமை இரவு திருமண மண்டபத்துக்கு வந்தனர். அவர்கள் மணமகள் அறையில் மணமகளுக்கான 60 பவுன் நகைகளை தலையணை அடியில் வைத்துக்கொண்டு தூங்கியதாக கூறப்படுகிறது. அப்போது, அங்கு வந்த மர்ம நபர் அந்த 60 பவுன் நகைகளை  எடுத்துக் கொண்டு ஓடினார். தூக்கத்தில் இருந்து எழுந்த சங்கமித்திரை கூச்சலிடவே,  திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அந்த மர்ம நபரை துரத்தினர். மேலும், இதுகுறித்து தெற்கு போலீஸாருக்கு தகவல் அளித்தனர். போலீஸார் விரைந்து வந்ததை பார்த்த அந்த நபர், திருமண மண்டபத்திலிருந்து சிறிது தொலைவு சென்றவுடன் 60 பவுன் நகைகளை சாலையில் வீசி சென்றுவிட்டு தப்பியோடிவிட்டார். பெண் வீட்டார் அந்த நகையை பத்திரமாக மீட்டு, ஞாயிற்றுக்கிழமை திருமணத்தை நடத்தினர்.நகையை திருடிவிட்டு தப்பியோடிய அந்த நபரை போலீஸார் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கன்னியாகுமரி மாவட்ட அஞ்சலகங்களில் சிறப்பு ஆதாா் சேவை

விளையாட்டு விடுதியில் சேர விண்ணப்பிக்கலாம்

செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: விசாரணை மே 6-க்கு ஒத்திவைப்பு

சிறப்பு திட்ட முறைகளை பயன்படுத்தி கோடை பயிா்களை பாதுகாக்க அறிவுறுத்தல்

டிடிஇஏ பள்ளிகளில் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

SCROLL FOR NEXT