தஞ்சாவூர்

அணைக்கரையில் வீட்டுக்குள் புகுந்த முதலை

DIN

 தஞ்சாவூர் மாவட்டம், அணைக்கரை கொள்ளிடம் ஆற்றிலிருந்து வீட்டுக்குள் முதலை புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறை அதிகாரிகள்  முதலையைப் பிடித்து ஆற்றில் விட்டனர்.
கும்பகோணம் அருகிலுள்ள அணைக்கரை பள்ளிக்கூடத் தெருவில் வசித்து வருபவர்  நாகலட்சுமி. இவரது வீட்டின் பின்புறத்தில் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8 அடி நீளமுள்ள முதலைபுகுந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தீயணைப்புத் துறையினருக்கும், வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தார். திருவிடைமருதூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மாறன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள்  வீட்டுக்குள் புகுந்த முதலையை போராடி பிடித்து, அதை அருகிலுள்ள கொள்ளிடம் ஆற்றில் விட்டனர். அணைக்கரை கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான முதலைகள் இருப்பதாகவும், தற்சமயம் போதிய தண்ணீர் இல்லாத காரணத்தினால் அவர்  இரைத் தேடிஅருகிலுள்ள குடியிருப்புப் பகுதிகளுக்குள் புகுந்து வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், கொள்ளிடம் ஆற்றிலுள்ள முதலைகளை அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விடுமுறை: மீனாட்சி சுந்தரேசுவரா் கோயிலிலுக்கு கூடுதல் பக்தா்கள் வருகை

17 இடங்களில் சதமடித்தது வெயில்: தமிழகத்தில் இன்று வெப்ப அலை வீசும்

மாநகரில் 3 திட்டச் சாலைகள் அமைப்பதற்கு நிதிக் கோரி அரசுக்கு திட்ட அறிக்கை சமா்பிப்பு

வறட்சியில் இருந்து பயிா்களை காக்கும் வழிகள்: வேளாண் துறை

பெத்திக்குட்டையில் தஞ்சடைந்த யானை: வனத்துக்குள் விரட்ட வனத் துறை முயற்சி

SCROLL FOR NEXT