தஞ்சாவூர்

6 ஆவது முறையாக எம்.பி. ஆகிறார் பழனிமாணிக்கம்

DIN


தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுகவை சேர்ந்த எஸ்.எஸ். பழநிமாணிக்கம் ஆறாவது முறையாக எம்.பி. ஆகிறார்.
இவர் கடந்த 1984, 1889, 1991 ஆகிய தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். அதன் பின்னர் 1996, 1998, 1999, 2004, 2009 ஆகிய தேர்தல்களில்  தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் தொடர்ந்து 5 முறை வெற்றி பெற்றார். இதில், 2004 முதல் 2014-ம் ஆண்டு வரை மத்திய நிதித்துறை இணை அமைச்சராக இருந்தார்.
2014-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்டார். 
இதில், தொடக்கச் சுற்று முதல் இறுதி வரை முன்னிலை பெற்று 3,63,652 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதன் மூலம், தஞ்சாவூர் தொகுதியிலிருந்து  ஆறாவது முறையாக மக்களவை உறுப்பினராக வெற்றி பெற்றார்.
தொண்டர்கள் கொண்டாட்டம்: இதனிடையே, ஒவ்வொரு சுற்று முடிவிலும் திமுக தொண்டர்கள் ஆங்காங்கே பட்டாசுகள் வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். மேலும், தஞ்சாவூர் கலைஞர் அறிவாலயம் முன் திமுக தெற்கு மாவட்டச் செயலரும், திருவையாறு சட்டப்பேரவை உறுப்பினருமான துரை. சந்திரசேகரன் உள்ளிட்டோர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

தமிழக, கேரள கடலோரப் பகுதிகளில் முதல் முறையாக அதீத அலை எச்சரிக்கை!

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

SCROLL FOR NEXT