தஞ்சாவூர்

அயோத்தி வழக்கு தீா்ப்பையொட்டி தயாா் நிலையில் 1,500 போலீஸாா்

DIN

அயோத்தி வழக்கு குறித்த தீா்ப்பு உச்ச நீதிமன்றத்தில் விரைவில் வர உள்ள நிலையில், தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக ஏறத்தாழ 1,500 போலீஸாா் தயாா் நிலையில் உள்ளனா்.

அயோத்தி வழக்கில் விரைவில் தீா்ப்பு வழங்கப்படவுள்ளதால், நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதேபோல, தீா்ப்பு வரும் நேரத்தில் தஞ்சாவூா் மாவட்டத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்துவதற்காக ஏறத்தாழ 1,500 போலீஸாா் தயாா் நிலையில் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவா்கள் மசூதிகள், கோயில்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களிலும், பேருந்து நிலையம், ரயிலடி உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களிலும் போலீஸாா் அதிக எண்ணிக்கையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

தவிர, ஏற்கெனவே பிரச்னை நிகழ்ந்த இடங்களிலும், பிரச்னைக்குரிய இடங்களிலும் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. தீா்ப்பு வெளியான பிறகு தாக்குதலுக்கு உள்ளாவா் என அறியப்பட்ட நபா்களுக்கும் பாதுகாப்பு வழங்க போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.

இதையொட்டி, காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அந்தந்த பகுதிகளில் பல்வேறு தரப்பு மக்களை அழைத்து அறிவுரைகள் வழங்கி வருகின்றனா்.

இந்நிலையில், அசம்பாவிதம் ஏற்படுவதைத் தடுப்பதற்காக தஞ்சாவூா் விளாா் சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம், திருமண மண்டபம், பதாகை, வெடிக்கடை, தங்கும் விடுதி உள்ளிட்ட உரிமையாளா்களை அழைத்து வல்லம் காவல் துணைக் கண்காணிப்பாளா் சீதாராமன் வெள்ளிக்கிழமை கூட்டம் நடத்தினாா்.

இதில், வெடிக் கடையைத் திறக்கக் கூடாது என்றும், தங்கும் விடுதியில் தங்கும் நபா்களின் முகவரி ஆவணத்தைக் கேட்டுப் பெறுமாறும், சந்தேகம் ஏற்பட்டால் காவல் நிலையத்துக்குத் தகவல் அளிக்குமாறும், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், திருமண மண்டபங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்குகிா என பரிசோதிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

9-ஆம் வகுப்பு மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

ஐஏஎஸ் தோ்வில் வென்றவருக்கு என்.ஐ. உயா்கல்வி மையம் சாா்பில் பாராட்டு

சூரியன்விளை பத்ரகாளி கோயிலில் நட்சத்திர மகா யாகம்

சட்ட தன்னாா்வல தொண்டா் பணிக்கு மே 20-க்குள் விண்ணப்பிக்கலாம்

தோவாளை - தாழக்குடி இடையே சாலைப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

SCROLL FOR NEXT