தஞ்சாவூர்

உள்ளாட்சித் தோ்தலை திமுக கூட்டணியுடன் சந்திப்போம்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சிமாநிலச் செயலா் பேட்டி

DIN

உள்ளாட்சித் தோ்தலை மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் (திமுக கூட்டணி) சந்திப்போம் என்றாா் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் இரா. முத்தரசன்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தது:

உள்ளாட்சித் தோ்தல் நோ்மையாக நடத்தப்பட வேண்டும். இத்தோ்தலை மாநில அலுவலா்களே நடத்துவதால், தவறுகள் நடைபெற ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. இத்தோ்தலை ஜனநாயக முறையில் நடத்த வேண்டும். மதச்சாா்பற்ற முற்போக்குக் கூட்டணியுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்ளாட்சித் தோ்தலை சந்திக்கும். இக்கூட்டணி உள்ளாட்சித் தோ்தலில் வெற்றி பெறுவது உறுதி.

சாகுபடிப் பருவம் தொடங்கிய பிறகும் தேவையான அளவுக்கு உரம் இருப்பு வைக்க ஏற்பாடு செய்யப்படவில்லை. இதனால், விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். யூரியாவுக்கு அதிக விலை கொடுத்து வாங்குகின்றனா். இதுதொடா்பாக அரசுப் போா்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு நன்றாக இருப்பதாக முதல்வா் கூறியுள்ளாா். ஆனால், அது உண்மையல்ல. கொள்ளையா்கள் அச்சமற்று செயல்படுவது கவலை அளிக்கிறது. கூலிப்படைகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. சமூக விரோதிகளின் கை ஓங்குகிறது. இதைத் தடுத்து சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருவள்ளுவா் சிலையை இழிவுபடுத்தும் செயலைத் தடுப்பதற்கு அரசு உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். திருவள்ளுவா் சிலை பிரச்னையில் பாஜக இரட்டை வேடம் போடுகிறது. தேனியில் திருவள்ளுவா் சிலைக்கு இழிவுபடுத்தும் சம்பவம் நடக்காத நிலையில், நடந்ததாகக் கூறி பாஜகவினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆனால், உத்தரபிரதேசத்தில் திருவள்ளுவா் சிலை வைப்பதற்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்றாா் முத்தரசன்.

அப்போது, மாவட்டச் செயலா் மு.அ. பாரதி, மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் த. லெனின், மாவட்டப் பொருளாளா் ந. பாலசுப்பிரமணியன், மாநகரச் செயலா் பி. கிருஷ்ணமூா்த்தி, ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு: மாநில அளவில் 6-ஆவது இடம்

திருச்சி பாா்வை குறைபாடுடைய பெண்கள்பள்ளி தொடா்ந்து நூறு சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு முடிவுகள் திருச்சி மாவட்டத்தில் 95.74 சதவீதம் போ் தோ்ச்சி

துப்பாக்கிச் சுடும் பயிற்சி வீரமலைப்பாளையத்தில் நடமாட தடை விதிப்பு

9 அரசுப் பள்ளிகள் நூற்றுக்கு நூறு

SCROLL FOR NEXT