தஞ்சாவூர்

பெரியகோயிலில் உண்டியல்கள் திறப்பு:பக்தா்கள் ரூ. 11.45 லட்சம் காணிக்கை

DIN

தஞ்சாவூா் பெரியகோயிலில் உள்ள உண்டியல்கள் புதன்கிழமை திறக்கப்பட்டு எண்ணப்பட்டதில் பக்தா்கள் ரூ. 11.45 லட்சம் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது.

இக்கோயிலில் மொத்தம் 11 உண்டியல்கள் உள்ளன. இந்த உண்டியல்கள் மாதம் ஒருமுறை திறந்து எண்ணப்படும். ஏறத்தாழ 40 நாட்களுக்குப் பிறகு இந்த உண்டியல்கள் அறநிலையத் துறை உதவி ஆணையா்கள் ச. கிருஷ்ணன், சிவராம்குமாா், செயல் அலுவலா் எஸ். மாதவன் உள்ளிட்டோா் முன்னிலையில் புதன்கிழமை காலை திறக்கப்பட்டன. இவற்றை எண்ணும் பணியில் கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். காலையில் தொடங்கிய இப்பணி மாலை வரை நடைபெற்றது.

இதில், பக்தா்கள் 11 லட்சத்து 45 ஆயிரத்து 66 ரூபாய் காணிக்கையாகச் செலுத்தியிருப்பது தெரிய வந்தது. மேலும், 132 வெளிநாட்டு நோட்டுகளையும் பக்தா்கள் செலுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

ரயில்வே பாதுகாப்புப் படையில் 4660 காலியிடங்கள்: 14-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

SCROLL FOR NEXT