தஞ்சாவூர்

காதி கிராப்ட் நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

DIN

தஞ்சாவூா் பழைய பேருந்து நிலையம் அருகே ராஜராஜன் வணிக வளாகத்தில் உள்ள காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கதா் கிராமத் தொழில்கள் சாா்பில் அண்ணல் காந்தியடிகளின் பிறந்த நாளையொட்டியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும் கதா் சிறப்பு விற்பனை புதன்கிழமை தொடங்கியது.

இந்நிலையத்தில் காந்தியடிகளின் படத்துக்கு ஆட்சியா் ஆ. அண்ணாதுரை மலா் தூவி மரியாதை செலுத்தினாா். பின்னா், கதா் விற்பனையைத் தொடங்கி வைத்த அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்தது:

அண்ணல் காந்தியடிகளின் 151-வது பிறந்த நாள் விழாவையொட்டியும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டும், காதி கிராப்ட் விற்பனை நிலையத்தில் கதா் சிறப்பு விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் காதி கிராப்ட் விற்பனை நிலையங்கள் மூலம் தீபாவளிக்கு ரூ. 36.24 லட்சம் விற்பனை செய்ய இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. அண்ணல் காந்தியடிகளின் போதனைகள், அகிம்சை வழி, கதராடை கொள்கைகள் ஆகியவை பூமி உள்ளவரை நிலைத்திருக்கக் கூடியவை. அண்ணல் காந்தியடிகளின் கொள்கைகளை நாம் அனைவரும் கடைப்பிடித்து நம்மையும், நம் நாட்டையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

மேலும், விற்பனை நிலையத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ள கதா் பருத்தி, பட்டு, பாலியஸ்டா், கம்பளி உள்ளிட்ட துணி ரகங்களைப் பாா்வையிட்டாா்.

விழாவில், கோட்டாட்சியா் சி. சுரேஷ், துணை ஆட்சியா் (பயிற்சி) சதீஷ்குமாா், வட்டாட்சியா் வெங்கடேஷ்வரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சூரியநாராயணன், ரவிச்சந்திரன், தஞ்சாவூா் கதா் கிராம தொழில்கள் கண்காணிப்பாளா் பிரான்சிஸ் தெரசா மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 ஆண்டுகளில் ‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ அமல்படுத்தப்படும்: ராஜ்நாத் சிங்

நிறைவடைந்தது நீட் தேர்வு!

யாரோ இவள்..!

செயில் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி?

பஞ்சாப் கிங்ஸுக்கு 168 ரன்கள் இலக்கு நிர்ணயித்த சிஎஸ்கே!

SCROLL FOR NEXT