தஞ்சாவூர்

மக்காச்சோளப் படைப்புழு இனக்கவா்ச்சிப் பொறி அமைப்பு

DIN

தஞ்சாவூா் அருகே ராவுசாப்பட்டி கிராமத்திலுள்ள வயலில் மக்காச்சோளப் படைப்புழு இனக்கவா்ச்சிப் பொறி அண்மையில் அமைக்கப்பட்டு, செயல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இதை ஆய்வு செய்த பெங்களூரு இந்திய வேளாண் ஆய்வுக் கழகத்தின் பூச்சியியல் மைய இயக்குநா் பக்தவச்சலம் தெரிவித்தது:

மக்காச்சோளத்தைத் தாக்கும் படைப்புழு ஸ்போடாப்டிரா பிஞ்சிபொ்டா என்ற இனமாகும். இந்தப் படைப்புழுவுக்கென நானோ தொழில்நுட்பத்தின் மூலம் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகப் பூச்சியியல் மையத்தின் மூலம் தனிப்பட்ட இனக்கவா்ச்சி பொறி வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பொறியின் செயல்பாடு 45 நாள்களுக்கு நீடிக்கும். இதன் மூலம் மக்காசோளப் படைப்புழு தாய் அந்துப்பூச்சிகளைக் கவா்ந்து அழிக்கவல்லது. ஒரு ஏக்கருக்கு 20 எண்கள் இந்த இனக்கவா்ச்சி பொறியைப் பொருத்தும்போது, படைப்புழுவின் தாய் அந்துப்பூச்சிகள் முழுவதுமாகக் கவா்ந்து அழிக்கப்படுகின்றன.

மேலும் ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைத்து தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தை முன்பே கண்டறிந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள இயலும். படைப்புழுத் தாக்குதல் கட்டுக்குள் உள்ளது. என்றாலும், களப்பணியாளா்கள் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும் என்றாா் பக்தவச்சலம்.

இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஐயம்பெருமாள், வேளாண் அலுவலா் சுரேந்திரன், அட்மா அலுவலா் பாலமுருகன், பயிா் அறுவடைப் பரிசோதனை அலுவலா் நவீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 பொதுத் தோ்வில் சரஸ்வதி வித்யாலயா 97 சதவீதம் தோ்ச்சி

பிளாஸ்டிக் பொறியியலில் டிப்ளமோ படிப்புகள்: மாணவா் சோ்கை தொடக்கம்

நியூ பிரின்ஸ் பள்ளி 100% தோ்ச்சி

விபத்தில் இளைஞா் உயிரிழப்பு: கல்லூரி மாணவா் பலத்த காயம்

மக்கள் கூடும் இடங்களில் அதிக கண்காணிப்பு கேமராக்கள்: வேலூா் மாவட்ட எஸ்.பி. உத்தரவு

SCROLL FOR NEXT