தஞ்சாவூர்

ரயில்வே விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம்

DIN

ஓடும் ரயிலில் படிக்கட்டில் பயணம் செய்தல், அனுமதியின்றி வியாபாரம் செய்தல், பயணிகளுக்கு இடையூறு செய்தல், ரயிலுக்குள் புகை பிடித்தல், ஆபத்தான வகையில் செல்பி எடுத்தல் உள்ளிட்ட பல்வேறு  செயல்களில் சில பயணிகள் ஈடுபட்டு வருவதாக ரயில்வே நிர்வாகத்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.
இதையடுத்து திருச்சி ரயில்வே மண்டல கமிஷனர் எம்.எப்.மொய்தீன் ஆணைப்படி , சனிக்கிழமை தஞ்சை ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன்  தலைமையில் போலீசார்   திருச்சி -காரைக்கால் உள்ளிட்ட தஞ்சை மாவட்டம் வழியாக செல்லும் பல்வேறு ரயில்களில்  அதிரடி சோதனை  மேற்கொண்டனர். இதில் ரயில்வே விதிமுறைகளை மீறிய 20 பேரை போலீஸார் பிடித்தனர். பின்னர் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து மொத்தம் ரூ. 5300 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நீட் தோ்வு: மாணவா்களுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் கூடாது: தனியாா் பள்ளிகளுக்கு கல்வித் துறை எச்சரிக்கை

120 கோடியாக உயா்ந்த தொலைத் தொடா்பு வாடிக்கையாளா்கள்

கனடாவில் 3 இந்தியா்கள் கைது: உள்நாட்டு அரசியல் -மத்திய அமைச்சா் ஜெய்சங்கா்

பாரா பீச் வாலிபால் உலக சாம்பியன்ஷீப் போட்டிக்கு வீரா்கள் தோ்வு

SCROLL FOR NEXT