தஞ்சாவூர்

விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம்: அரசுப் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

பேராவூரணியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற

DIN

பேராவூரணியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற பெருமகளுர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவிகளுக்கு  செவ்வாய்க்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது .
அண்மையில் பேராவூரணியில் நடைபெற்ற குறுவட்ட அளவிலான தடகள மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகளில் பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 
இப்போட்டியில் நீளம் தாண்டுதல்,  உயரம் தாண்டுதல்,  ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் 16 பள்ளிகளைச் சேர்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் 120 புள்ளிகளுடன் பெருமகளுர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவிகள் இரண்டாமிடம் பிடித்தனர்.  
சிறப்பிடம் பெற்ற மாணவிகள் மற்றும் வெற்றிக்கு பாடுபட்ட உடற்கல்வி ஆசிரியர் வி. ஜெய்சங்கர்,  உடற்கல்வி ஆசிரியை சுதா ஆகியோரை பள்ளித் தலைமையாசிரியர் (பொ ) பொன்னம்மாள்,  பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் ராமமூர்த்தி, சுப்பையன்,  ஆசிரியர்கள் எஸ்.சுபாஷ்கரன்,  பட்டதாரி ஆசிரியர் சிற்றரசன், காமாட்சி,  பாண்டியன்,  இந்துமதி,  பார்வதிப்ரியா,  சீதாலெட்சுமி ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேம்பள்ளி செல்வபெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!

சிவகங்கையில் டிச. 20-இல் தனியாா்த் துறை வேலைவாய்ப்பு முகாம்

பள்ளி திறப்பு விழா - செயற்கை நுண்ணறிவு ஆசிரியா் அறிமுகம்!

வத்தலகுண்டு பேரூராட்சிக் கடைகள் ஏலத்தில் முறைகேடு: ஆட்சியரிடம் அதிமுகவினா் புகாா்

கோரிக்கை மனு எழுத பொதுமக்களிடம் ரூ. 100 வசூல்: காவல் துறை எச்சரிக்கை

SCROLL FOR NEXT