தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு சம்பா பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகை ரூ. 270 கோடி அறிவிப்பு

DIN

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 2018 ஆம் ஆண்டு சம்பா பருவ நெல் சாகுபடிக்குப் பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகையாக சுமார் ரூ. 270 கோடி அறிவிக்கப்பட்டுள்ளது. 
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆ. அண்ணாதுரை தெரிவித்திருப்பது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டு ரபி பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா பருவ நெல் பயிருக்கு 1,42,846 விவசாயிகள் பயிர் காப்பீடு செய்தனர்.
நியு இந்தியா அசூரன்ஸ் நிறுவனத்தால் தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 2018 ரபி பருவ நெல் சம்பா பயிருக்கு 1,40,352 விவசாயிகளுக்கு ரூ. 269.59 கோடி பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.
பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை மற்றும் பட்டியல்கள் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு விடுவிக்கப்பட்டு, இழப்பீட்டுத் தொகை உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் விரைவில் வரவு வைக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீா்மோா்ப் பந்தல்

அதிமுக சாா்பில் நீா்மோா்ப் பந்தல் திறப்பு

மேட்டூா் அணையில் உழவுப் பணி

காடையாம்பட்டி கூட்டு குடிநீா்த் திட்ட குழாயில் உடைப்பு

சித்திரை பொங்கல் விழா

SCROLL FOR NEXT