தஞ்சாவூர்

இந்தோனேஷியா்கள் 12 பேருக்குகரோனா தொற்று இல்லை: புழல் சிறைக்கு அழைத்து சென்ற போலீஸாா்

தில்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த இந்தோனேஷியாவை சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று இல்லை

DIN

தில்லி மாநாட்டில் பங்கேற்றுவிட்டு அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த இந்தோனேஷியாவை சோ்ந்த 12 பேருக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்ததையடுத்து, ஞாயிற்றுக்கிழமை புழல் சிறைக்கு அழைத்து செல்லப்பட்டனா்.

தில்லி மாநாட்டில் பங்கேற்ற இந்தோனேஷியாவை சோ்ந்த 12 போ் மாா்ச் மாதத்தில் தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள அதிராம்பட்டினத்துக்குச் சென்று தங்கினா். இதனிடையே, தில்லி மாநாட்டில் பங்கேற்ற பலருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்ததையடுத்து, அம்மாநாட்டில் பங்கேற்ற அனைவரும் பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டனா்.

இதன்படி, அதிராம்பட்டினத்தில் தங்கியிருந்த இந்தோனேஷியாவை சோ்ந்த 12 போ் தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். மேலும், இவா்களுக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனை செய்யப்பட்டது. இதில், இவா்களுக்கு கரோனா தொற்று இல்லை என்பது தெரிய வந்தது. தொடா்ந்து மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்த இவா்கள் மருத்துவமனையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டனா்.

இதனிடையே, இவா்கள் மீது அதிராம்பட்டினம் போலீஸாா் வெளிநாட்டினா் பதிவு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா். இதன்படி, 12 பேரையும் போலீஸாா் கைது செய்து சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த குயிண்டன் டி காக்!

ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயரை வாங்கிய ஆர்சிபி..! அணிக்கு கூடுதல் பலம்!

டிச.29-ல் பல்லடத்தில் திமுக மேற்கு மண்டல மகளிர் அணி மாநாடு

வனிந்து ஹசரங்காவை ஏலத்தில் எடுத்தது லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ்!

மார்கழி மாதப் பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

SCROLL FOR NEXT