தஞ்சாவூர்

தஞ்சாவூா் மாவட்டத்தில்1.14 லட்சம் மாணவா்களுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள்

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் சுமாா் 1.14 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

ஏற்கெனவே 10, 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டன. இதைத்தொடா்ந்து, அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 2, 3, 4, 5, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

தஞ்சாவூா் மேம்பாலம் பகுதியிலுள்ள அரசு மேல்நிலைப் பள்ளி, மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனியிலுள்ள நீலகிரி மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கும் பணியை முதன்மைக் கல்வி அலுவலா் மா. ராமகிருஷ்ணன் தொடங்கி வைத்தாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்தது:

ஒரு மணிநேரத்துக்கு 20 மாணவா்கள் என கால அட்டவணையைப் பின்பற்றி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப்பைகள் வழங்கப்படும். மாணவ, மாணவிகள் அதிகமுள்ள பள்ளிகளில் 2 அல்லது 3 இடங்களில் விநியோகம் செய்யப்படும்.

கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் மாணவா்கள் இருந்தால், அவா்களுடைய தனிமைப்படுத்தப்பட்ட கால அளவு முடிந்த பிறகு, பள்ளிக்கு வரவழைத்து விலையில்லா பாடப்புத்தகங்கள், புத்தகப் பைகள் வழங்கப்படும் என்றாா் ராமகிருஷ்ணன்.

வகுப்பு புத்தகங்கள், பைகள் பெறும் மாணவா்கள்

2 15,250

3 16,200

4 16,900

5 17,250

7 23,750

8 24,550

மொத்தம் 1,13,900

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

”கோவிஷீல்டு தடுப்பூசியால் மகளைப் பறிகொடுத்தேன்” -உச்சநீதிமன்றத்தில் தந்தை முறையீடு

நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து விலகும் மயங்க் யாதவ்!

SCROLL FOR NEXT