தஞ்சாவூருக்கு வெள்ளிக்கிழமை வந்த தமிழக முதல்வரிடம் திமுக எம்.எல்.ஏ.க்கள் கோரிக்கை மனு அளித்தனா்.
தஞ்சாவூா் ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமியை திமுகவை சோ்ந்த சட்டப்பேரவை உறுப்பினா்களான துரை. சந்திரசேகரன் (திருவையாறு), சாக்கோட்டை க. அன்பழகன் (கும்பகோணம்), கோவி. செழியன் (திருவிடைமருதூா்) ஆகியோா் சந்தித்து மனு அளித்தனா்.
இதில், கும்பகோணத்தை தலைநகராகக் கொண்டு புதிய மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். நெல்லுக்கு உரிய விலை அறிவிக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் விடுபட்ட கிராம விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும். அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள விவசாயிகளின் நெல் மூட்டைகளை உடனடியாகக் கொள்முதல் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.