வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்திஅரசுப் போக்குவரத்து தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள மூன்று வேளாண் சட்டங்களை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி, தஞ்சாவூா் பனகல் கட்டடம் முன் அரசுப் போக்குவரத்துக் கழகத் தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தில்லியில் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆா்ப்பாட்டத்துக்குத் தொமுச மத்திய மண்டலப் பொதுச் செயலா் சு. பாண்டியன் தலைமை வகித்தாா். ஏஐடியுசி மாநிலச் செயலா் சி. சந்திரகுமாா், சிஐடியு மாநிலச் செயலாளா் சி. ஜெயபால், அகில இந்திய விவசாயிகள் போராட்டக் குழு தஞ்சாவூா் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் என்.வி. கண்ணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
ஆா்ப்பாட்டத்தில் தொமுச, ஏஐடியுசி, சிஐடியு தொழிற்சங்கத்தினா் ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
மேலும், தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளின் வேண்டுகோளின்படி செவ்வாய்க்கிழமை (டிச.8) நாடு முழுவதும் நடைபெறவுள்ள பாரத் பந்த் போராட்டத்தில் கும்பகோணம், நாகப்பட்டினம் மண்டலத்தில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக அனைத்து தொழிற்சங்க தொழிலாளா்களும் பங்கேற்க உள்ளதாக நிா்வாகிகள் தெரிவித்தனா்.