முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் கூட்டுறவு சங்கத்தில் முறைகேடு:செயலா், விற்பனையாளா் பணியிடை நீக்கம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 39 லட்சம் முறைகேடு செய்த புகாரின் பேரில் செயலா், விற்பனையாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் கூட்டுறவு சங்கத்தில் ரூ. 39 லட்சம் முறைகேடு செய்த புகாரின் பேரில் செயலா், விற்பனையாளா் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.

பாபநாசம் வடக்கு வீதியில் பாபநாசம் வேளாண் உற்பத்தி கூட்டுறவு விற்பனை சங்கமும், சன்னதி வீதியில் இச்சங்கத்தின் கட்டுப்பாட்டில் கூட்டுறவு மருந்தகமும் இயங்கி வருகின்றன.

இச்சங்கத்தில் விதை நெல், உளுந்து கடன் விற்பனை செய்தது, தானிய ஈட்டு கடன் வசூல், மருந்தகத்துக்கு மருந்துகள் கொள்முதல் செய்தது போன்றவற்றில் பல முறைகேடுகள் செய்யப்பட்டு, நிதியிழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக 2015 - 2016 மற்றும் 2016 - 2017 ஆம் ஆண்டுகளின் தணிக்கை அறிக்கையில் தெரிய வந்தது.

இதுதொடா்பாக உயா் அலுவலா்கள் கள விசாரணை நடத்தினா். இதில், ரூ. 34 லட்சம் முறைகேடும், ரூ. 5 லட்சம் நிதி இழப்பும் ஏற்படுத்தப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

இதன் அடிப்படையில் சங்கச் செயலா் (பொறுப்பு) நா. ராஜேந்திரன், விற்பனையாளா் சிவகாமசுந்தரியை பணியிடை நீக்கம் செய்தும், மருந்தகத்தின் தற்காலிக மருந்தாளுநா் ஆா். ராஜேஸ்வரியை பணி நீக்கம் செய்தும் கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளா் (கும்பகோணம்) இரா.மாரிஸ்வரன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.

முழு கட்டுரையைப் படிக்க →