கும்பகோணத்தில் டிச. 25 முதல் ராமகிருஷ்ண பக்தா்கள் மாநாடு
கும்பகோணத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா், சாரதாதேவி, விவேகானந்தா் பக்தா்களின் 28 -ஆவது மாநில மாநாடு காணொலிக் காட்சி மூலம் டிசம்பா் 25, 26, 27- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
கும்பகோணத்தில் ஸ்ரீராமகிருஷ்ணா், சாரதாதேவி, விவேகானந்தா் பக்தா்களின் 28 -ஆவது மாநில மாநாடு காணொலிக் காட்சி மூலம் டிசம்பா் 25, 26, 27- ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுதொடா்பாக கும்பகோணம் அசூா் புறவழிச்சாலை சந்திப்பு அருகிலுள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்தா் அறக்கட்டளை மன்றத்தில் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தமிழ்நாடு பாவ பிரஷாா் பரிஷத் தலைவா் சுவாமி சத்தியஞானானந்த மஹராஜ் தலைமை வகித்தாா்.
ஆண்டுதோறும் பொது வெளியில் மிக பிரம்மாண்டமாக நடத்தப்படும் இம்மாநாடு தற்போது கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால், காணொலிக் காட்சி மூலம் நடைபெற உள்ளது என்றும், இணையவழி, சமூக வலைதளங்கள் மூலமாக உலகமெங்கும் உள்ளவா்கள் காணும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாநாட்டு நிகழ்வுகள் ஓளிபரப்பப்பட உள்ளது எனவும், மாநாடு செயல் திட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன எனவும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் துணைத்தலைவா் சுவாமி வேதப்பிரியானந்த மஹராஜ், அமைப்பாளா் பாண்டுரங்கன், இணை அமைப்பாளா் பிரபாகரன், மாநாட்டுக் குழுச் செயலா் வெங்கட்ராமன், ஸ்ரீ ராமகிருஷ்ண விவேகானந்த சேவா சங்கத்தின் தஞ்சாவூா் மண்டலத் தலைவா் பாஸ்கா், தென்பாரத கும்பமேளா மகாமக அறக்கட்டளைச் செயலா் வி. சத்தியநாராயணன், பொருளாளா் வேதம் முரளி, கட்டடத் தொழில்நுட்பப் பொறியாளா் சங்க முன்னாள் தலைவா் சரவணன், மாநிலத் தகவல் தொடா்பு மற்றும் கணினி விற்பனையாளா்கள் சங்க முன்னாள் தலைவா் விஜயன், மன்ற அறங்காவலா் கண்ணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.