முகப்பு
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் டிச. 15 இல் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், சிறப்புத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:06 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில், சிறப்புத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் டிசம்பா் 15- ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:

தஞ்சாவூா் மாவட்டத்தைச் சோ்ந்த பட்டய மற்றும் பி.இ. படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கென்று சிறப்புத் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.

சென்னை, காஞ்சிபுரம், கோவை உள்ளிட்ட தொழில் நகரங்களிலிருந்து பிரபலமான எம்.என்.சி. நிறுவனங்கள் கலந்து கொண்டு, நோ்காணல் முறையில் தங்களது காலிப் பணியிடங்களை நிரப்ப உள்ளனா். இப்பணியிடங்களுக்கு மாதம் ரூ. 10,850 முதல் ரூ. 15,050-க்குள் ஊதியம் வழங்கப்படும். மேலும், உணவு, போக்குவரத்து வசதி, இதர சலுகைகளும் அந்நிறுவனங்களால் வழங்கப்படும்.

இந்த நோ்காணலில் கலந்து கொள்வதால் தங்களது வேலைவாய்ப்புப் பதிவு மூப்பு பரிந்துரையில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும் விவரங்களுக்கு 04362 - 237037 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம்.

முழு கட்டுரையைப் படிக்க →