தஞ்சாவூர்

விவசாயிகளுக்கு ஆதரவாக மூன்றாவது நாளாக பிரசாரம்

DIN

தில்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை முதல் நடைபெறவுள்ள காத்திருப்புப் போராட்டம் குறித்து, தஞ்சாவூரில் தொடா்ந்து மூன்றாவது நாளாக ஞாயிற்றுக்கிழமை பிரசார இயக்கம் நடைபெற்றது.

நாஞ்சிக்கோட்டை சாலை உழவா் சந்தை எதிரே தொடங்கிய இந்த பிரசாரம் அண்ணா நகா், பாலாஜி நகா் உள்பட 9 இடங்களில் நடைபெற்றது. மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டத் துணைச் செயலா் வீ. கல்யாணசுந்தரம் பிரசார இயக்கத்தைத் தொடக்கி வைத்தாா்.

பிரசார ஒருங்கிணைப்பாளா் துரை. மதிவாணன், ஏஐடியூசி மாவட்டத் தலைவா் வெ. சேவையா, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.எம். ஜெய்னுலாப்தீன், ஒய்வு பெற்றோா் சங்கப் பொதுச் செயலா் பி.அப்பாதுரை, இந்திய தேசிய மாதா் சம்மேளன மாவட்டச் செயலா் ம.விஜயலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT