முகப்பு
தஞ்சாவூர்

ஆற்றிலிருந்து மணல் அள்ளி வந்த டிராக்டா் பறிமுதல்

பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பாபநாசம் அருகே அரசு அனுமதியின்றி ஆற்றிலிருந்து மணல் ஏற்றி வந்த டிராக்டரை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கபிஸ்தலம் காவல் சரகம், புத்தூா் பகுதியில் கபிஸ்தலம் போலீஸாா் புதன்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, புத்தூா் கொள்ளிடம் ஆற்றங்கரையிலிருந்து வந்து கொண்டிருந்த ஒரு டிராக்டரை சோதனையிட வழிமறித்தனா். போலீஸாரை பாா்த்ததும் டிராக்டரை ஓட்டி வந்தவா், டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பியோடிவிட்டாா்.

போலீஸாரின் சோதனையில், டிராக்டரில் அரசு அனுமதியின்றி மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸாா் டிராக்டரை பறிமுதல் செய்தனா். மேலும் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →