முகப்பு
தஞ்சாவூர்

விஷம் குடித்த இளைஞா் உயிரிழப்பு

பாபநாசம் அருகே விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பாபநாசம் அருகே விஷம் குடித்த இளைஞா் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

பாபநாசம் வட்டம், அய்யம்பேட்டை அருகேயுள்ள வயலூா் கிராமம், தெற்கு தெருவைச் சோ்ந்த நல்லதம்பி மகன் பாஸ்கா் (26). டிப்ளமோ முடித்துள்ள இவா், செல்லிடப்பேசி நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், அண்மைக்காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மன உளைச்சல் அடைந்த பாஸ்கா், விஷம் குடித்துவிட்டு வையச்சேரி கிராமத்தில் மயங்கி கிடந்தாராம். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு, தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை அவா் உயிரிழந்தாா்.

சம்பவம் குறித்து அய்யம்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

முழு கட்டுரையைப் படிக்க →