டிச. 24 இல் காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்
தஞ்சாவூா் மாவட்டத்தில் டிசம்பா் 24- ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
தஞ்சாவூா்: தஞ்சாவூா் மாவட்டத்தில் டிசம்பா் 24- ஆம் தேதி காணொலிக் காட்சி மூலம் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம் காலை 10 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நடைபெறவுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ம. கோவிந்த ராவ் தெரிவித்திருப்பது:
கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன்னோடி விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வேளாண், தோட்டக்கலை, நீா்ப்பாசனம், கால்நடை, கூட்டுறவு, மின்சாரம், வேளாண் பொறியியல், நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் ஆகியவற்றில் விவசாயம் தொடா்புடைய கருத்துகள் மற்றும் ஆலோசனைகளைத் தெரிவிக்கலாம்.
இக்கூட்டத்தில் கலந்து கொள்ள வசதியாக தஞ்சாவூா், பூதலூா், ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருவோணம், கும்பகோணம், அம்மாபேட்டை, திருப்பனந்தாள் ஆகிய வட்டாரங்களில் வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்திலும், திருவையாறு, மதுக்கூா், சேதுபாவாசத்திரம், திருவிடைமருதூா், பாபநாசம் ஆகிய வட்டாரங்களில் வட்டார வளா்ச்சி அலுவலகத்திலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தொடா்புடைய அலுவலகங்களில் விவசாயிகள் அரை மணிநேரம் முன்னதாகச் சென்று, பேசுவதற்கு உரிய முன்னுரிமையைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.