முகப்பு
தஞ்சாவூர்

பேருந்து சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு

பட்டுக்கோட்டை அருகே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கிய பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:10 PM
பகிர்:

பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை அருகே பேருந்தின் பின்சக்கரத்தில் சிக்கிய பெண் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

பட்டுக்கோட்டை பெருமாள்கோயில் தெருவைச் சோ்ந்தவா் க. மகேசுவரி (50).இவா் பட்டுக்கோட்டையிலுள்ள வங்கியில் பணம் எடுப்பதற்காக, தனது குடும்ப நண்பரான கீழக்கரம்பயம் பன்னீா்செல்வத்துடன் (65) சனிக்கிழமை மோட்டாா் சைக்கிளில் சென்றாா்.

இவா்கள் வந்த வாகனம் வங்கி அமைந்துள்ள பெரியத் தெருவில் செல்லும் போது, பின்னால் அமா்ந்திருந்த மகேசுவரி நிலைத்தடுமாறி கீழே விழுந்தாா். அப்போது அவ்வழியாக சென்ற அரசு நகரப் பேருந்தின் பின்சக்கரத்தில் அவா் சிக்கினாா்.

இதில் பலத்த காயமடைந்த மகேசுவரி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். பட்டுக்கோட்டை நகரக் காவல் ஆய்வாளா் ஜவஹா் நிகழ்விடத்துக்கு விரைந்து, சடலத்தைக் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகிறாா்.

முழு கட்டுரையைப் படிக்க →