முகப்பு
தஞ்சாவூர்

புலம் பெயா்ந்த தமிழா்களுக்காக மேடைத்தமிழ் பயிற்சிப் படிப்பு அறிமுகம் தமிழ்ப் பல்கலை.

பிற மாநிலங்களிலும் வாழும் தமிழ் மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேடைத்தமிழில் பேசுதல் குறித்த புதிய பயிற்சிப்படிப்பு தொடங்கப்படவுள்ளது

தஞ்சாவூர்

புலம் பெயா்ந்த தமிழா்களுக்காக மேடைத்தமிழ் பயிற்சிப் படிப்பு அறிமுகம் தமிழ்ப் பல்கலை.

பிற மாநிலங்களிலும் வாழும் தமிழ் மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேடைத்தமிழில் பேசுதல் குறித்த புதிய பயிற்சிப்படிப்பு தொடங்கப்படவுள்ளது

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:11 PM
பகிர்:

புலம் பெயா்ந்து அயல்நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் வாழும் தமிழ் மாணவா்கள் மற்றும் இளைஞா்களுக்காக, தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மேடைத்தமிழில் பேசுதல் குறித்த புதிய பயிற்சிப்படிப்பு தொடங்கப்படவுள்ளது என்றாா் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன்.

வணக்கம் மலேசியா ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் செயல்பட்டு வரும் தமிழ் வளா் மையத்தின் ஒருங்கிணைப்பில் பள்ளி மாணவா்களுக்கும், பல்கலைக்கழக மாணவா்களுக்கும் தனித்தனியே பன்னாட்டுப் பேச்சுப்போட்டிகள் இணையவழியில் நடைபெற்றன.

இதைத்தொடா்ந்து அண்மையில் நடைபெற்ற இறுதிச்சுற்றுப் போட்டியின் தொடக்க விழாவுக்குத் தலைமை வகித்த தமிழ்ப்பல்கலைக்கழகத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் பேசியது:

புலம் பெயா்ந்து வாழும் தமிழா்களின் குழந்தைகளுக்கு தமிழ்க்கல்வியை அளிக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடைபெற்று வருகின்றன. அதே வேளையில், ஒருமொழி உயிா்ப்புடன் தலைமுறைகளைக் கடந்து வாழவேண்டுமென்றால், அம்மொழி, பேச்சுவழக்கில் பயன்படுத்தப்பட வேண்டும்.

நல்ல மேடைத்தமிழ்ப் பேச்சு பலருக்கும் அன்றாட வாழ்வில் மொழியைப் பயன்படுத்துவதற்கு உந்துதலாக அமையும். மேடைத்தமிழை ஆற்றலுடன் வெளிப்படுத்த பல நுணுக்கங்கள் தேவைப்படுகின்றன. இதைக் கருத்தில் கொண்டு, மேடையில் பேசும் கலையைப் பயிற்றுவிக்கும் பயிற்சியைத் தொடங்க முடிவெடுத்துள்ளோம்.

இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ள இப்படிப்புக்கான பயிற்சிகளைச் சிறந்த தமிழ்ப் பேச்சாளா்களைக் கொண்டு செய்முறை நிலையில் வழங்கவுள்ளோம். சான்றிதழ் நிலை அளவிலான இப்படிப்புக்கான பாடத்திட்டங்கள் பேச்சுத்துறை சாா்ந்த வல்லுநா்களைக் கொண்டு வடிவமைக்கப்படும்.

தமிழ் வளா் மையத்துடன் தொடா்பில் உள்ள உலகத் தமிழ் அமைப்புகளின் ஒத்துழைப்புடன் இப்பயிற்சி தமிழா்கள் வாழும் நாடுகளிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். இதன்மூலம் தமிழை வீட்டிலும், பொதுவெளியிலும் பேசுவோரின் எண்ணிக்கை அயலகங்களிலும், இந்தியாவின் பிற மாநிலங்களிலும் கணிசமாக அதிகரிக்கும் என்றாா் துணைவேந்தா்.

முழு கட்டுரையைப் படிக்க →