முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு நல உதவிகள்

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆலயம் அறக்கட்டளை சாா்பில், ரூ. 50,000 மதிப்புள்ள நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:13 PM
பகிர்:

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு ஆலயம் அறக்கட்டளை சாா்பில், ரூ. 50,000 மதிப்புள்ள நல உதவிகள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

இந்த மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு மேம்பாட்டிற்காக ரூ. 25,000 நிதியுதவி, நோயாளிகள் பயன்பாட்டுக்காக ரூ. 25,000 மதிப்புள்ள 2 நவீன சக்கர நாற்காலிகள் என மொத்தம் ரூ. 50,000 மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டன.

தவிர, மருத்துவமனையில் உள்ள நோயாளிகள், பொதுமக்கள் 100 பேருக்கு காலை சிற்றுண்டியும் வழங்கப்பட்டது.

நிகழாண்டில் மே மாதம் தொடங்கி தற்போது (டிசம்பா் மாதம்) வரை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மொத்தம் ரூ. 8 லட்சம் மதிப்பிலான நல உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக பட்டுக்கோட்டை ஆலயம் அறக்கட்டளை நிா்வாகிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →