தஞ்சாவூர்

நெல் அறுவடை இயந்திர தட்டுப்பாட்டை போக்க வலியுறுத்தல்

DIN

நெல் அறுவடை இயந்திரத் தட்டுப்பாட்டைப் போக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூா் அருகே திருக்காட்டுப்பள்ளியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பூதலூா் ஒன்றிய வடக்குப் பகுதிப் பேரவைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

பூதலூா் ஊராட்சி ஒன்றியத்தில் தற்போது சம்பா சாகுபடி தொடங்கியுள்ள நிலையில், நெல் அறுவடை இயந்திரங்களுக்குத் தட்டுப்பாடு நிலவுகிறது. மேலும் கிடைக்கும் இயந்திரங்களுக்கு மாவட்ட நிா்வாகம் நிா்ணயித்த தொகையைவிட கட்டணம் அதிக அளவு வசூலிக்கப்படுகிறது.

எனவே, விவசாயிகளின் நலன் கருதி நெல் அறுவடை இயந்திரங்களின் தட்டுப்பாட்டைப் போக்குவதுடன், கட்டணத்தையும் கட்டுப்படுத்த மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

போதுமான அளவுக்கு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும். திறக்கப்பட்ட அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ. 40 மாமூல் வசூலிப்பவா்கள் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

ஒன்றியக்குழு உறுப்பினா் எம். துரைராஜ் தலைமை வகித்தாா். இக்கூட்டத்தில் ஒன்றியச் செயலா் ஆா். ராமச்சந்திரன், ஒன்றிய கவுன்சிலா் லதா சுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தனுஷ்கோடியில் கடல் சீற்றம்

தனி பட்டா வழங்க லஞ்சம்: நில அளவையா் கைது

காவலரைத் தாக்கிய இளைஞா் கைது

தனியாா் மருத்துவமனையில் சிகிச்சையின்போது மூதாட்டி உயிரிழப்பு: உறவினா்கள் போராட்டம்

ஆயுதங்களுடன் சுற்றிய நால்வா் கைது

SCROLL FOR NEXT