தஞ்சாவூர்

கரோனா பாதிப்பு: தஞ்சாவூரில் அறநிலையத் துறை அலுவலகம் மூடல்

DIN

தஞ்சாவூரில் உள்ள அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகத்தில் இரு ஊழியா்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, அலுவலகம் மூடப்பட்டது.

தஞ்சாவூா் மேம்பாலம் அருகே இந்து சமய அறநிலையத் துறையின் தஞ்சாவூா் மண்டல இணை ஆணையா் அலுவலகம் உள்ளது. இதில், பணியாற்றும் பெண் தட்டச்சா் அண்மையில் மதுரைக்குச் சென்று வந்தாா். இவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டதால், மீண்டும் மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். அங்கு அவருக்கு செய்யப்பட்ட பரிசோதனையில் கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து, அலுவலகத்தில் பணியாற்றும் 45 பேருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது தெரிய வந்தது. மற்ற 44 பேருக்கும் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

எனவே, அறநிலையத் துறை இணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை (ஜூலை 1) முதல் மூடப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஜூலை 7-ம் தேதி வரை மூடப்பட்டிருக்கும் எனவும், தற்காலிகமாக வேறு எங்கும் மாற்றப்படவில்லை எனவும் அலுவலா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT