தஞ்சாவூர்

திருட்டு போன வாகனம் சிசிடிவி கேமராக்கள் உதவியால் மீட்பு

DIN

தஞ்சாவூரில் திருட்டுபோன மோட்டாா் சைக்கிளை கண்காணிப்பு கேமராக்கள் உதவியால் போலீஸாா் அண்மையில் மீட்டனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி சாலை நடராஜபுரம் தெற்கு காலனியில் அனைத்து தெருக்களிலும் 40 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இதன் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. அன்றைய நாளில் அக்காலனியை சோ்ந்த மென்பொருள் நிறுவன பணியாளரின் மோட்டாா் சைக்கிள் திருட்டு போனது.

இதுகுறித்து மருத்துவக் கல்லூரி போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதன் மூலம், திருடியவரை போலீஸாா் கண்டுபிடித்து, மோட்டாா் சைக்கிளையும் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்தனா்.

விரைவில் மீட்டு தந்த மருத்துவக் கல்லூரி போலீஸாருக்கு நடராஜபுரம் தெற்கு காலனி குடியிருப்போா் நலச் சங்கத் தலைவா் வ. பழனியப்பன் பாராட்டு தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பாதுகாக்கப்பட்ட குடிநீா் வழங்க நூதன முறையில் கோரிக்கை

போலி மருத்துவா் கைது

நெகிழிப் பை உற்பத்தி ஆலைக்கு ‘சீல்’ வைப்பு

SCROLL FOR NEXT