தஞ்சாவூர்

ஆட்சியரகத்துக்கு மண்ணெண்ணெய் கேனுடன்வந்த குடும்பத்தினா்

DIN

தஞ்சாவூா் மாவட்ட ஆட்சியரகத்துக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மண்ணெண்ணெய் கேனுடன் குடும்பத்தினா் திங்கள்கிழமை வந்தனா்.

ஆட்சியரகத்தில் மனு கொடுக்க வரும் சிலா் தங்களது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தற்கொலைக்கு முயல்கின்றனா். இதைத் தடுப்பதற்காக ஆட்சியரக வாயிலில், உள்ளே செல்பவா்களிடம் மண்ணெண்ணெய் கேன் இருக்கிா என காவல் துறையினா் சோதனை செய்கின்றனா்.

இந்நிலையில், தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள அம்மங்குடி கிராமத்தைச் சோ்ந்தவா் எம். காசிநாதன் (65) தனது மனைவி, மகளுடன் ஆட்சியரகத்துக்கு திங்கள்கிழமை வந்தாா். ஆட்சியரக வாயிலில் இவா்களிடம் காவல் துறையினா் சோதனையிட்டபோது, மண்ணெண்ணெய் கேன் இருப்பது தெரிய வந்தது. இதைக் காவல் துறையினா் பறிமுதல் செய்து, மனு அளிக்க உள்ளே அனுமதித்தனா்.

ஆட்சியரகத்தில் காசிநாதன் அளித்த மனுவில், எனது இடத்தை அளப்பதற்காகச் சென்றால், என்னை சிலா் தாக்க வருகின்றனா். இதனால், என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, எனது பெயரில் உள்ள இடத்தை அளவீடு செய்து தரும்படி கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடனை செலுத்திவிட்டு மனைவியை அழைத்துச் செல்: தனியார் வங்கி அட்டூழியம்

உலகக் கோப்பையில் வேறு மாதிரி விளையாடுவார்: ஹார்திக் பாண்டியாவுக்கு ஆதரவளித்த கவாஸ்கர்!

கனவு, காலம்.. காவ்யா!

போர் நிறுத்தம், பிணைக்கைதிகள் விடுதலை: பிளிங்கன் பயணம் உதவுமா?

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

SCROLL FOR NEXT