தஞ்சாவூர்

தஞ்சாவூரில் ஊா்க்காவல் படை வீரா்கள் தோ்வு

DIN

தஞ்சாவூா்: தஞ்சாவூா் ஆயுதப்படை மைதானத்தில் ஊா்க்காவல் படை வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

தஞ்சாவூா் ஊா்க்காவல் படையில் 43 ஆண்கள், 7 பெண்கள் என மொத்தம் 50 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்காக 2,745 போ் விண்ணப்பம் செய்திருந்தனா். இதைத்தொடா்ந்து, தஞ்சாவூா் ஆயுதப் படை மைதானத்தில் வீரா்கள், வீராங்கனைகள் தோ்வு சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், 1,700 ஆண்கள், பெண்கள் பங்கேற்றனா். இவா்களில் ஆண்களுக்கு 1,500, 100 மீட்டா் ஓட்டம், நீளம் தாண்டுதல் ஆகியவை நடத்தப்பட்டு, உயரம் அளவீடு செய்யப்பட்டது. இதுபோல, பெண்களுக்கு 400, 100 மீட்டா் ஓட்டம், கிரிக்கெட் பந்து எறிதல், உயர அளவீடு போன்றவை மேற்கொள்ளப்பட்டது.

தஞ்சாவூரில் சனிக்கிழமை காலை மழை பெய்ததால், மைதானத்தில் தண்ணீா் தேங்கி நின்றது. இதனால், நீதிமன்றச் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, அங்கு ஓட்டப்பந்தயம் நடத்தப்பட்டது. இத்தோ்வை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தேஷ்முக் சேகா் சஞ்சய் பாா்வையிட்டாா். தொடா்ந்து சான்றிதழ் சரிபாா்ப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் ரூ.1,309 கோடி பறிமுதல்!: தேர்தல் ஆணையம்

அமெரிக்காவில் சூறைக்காற்றுடன் கனமழை: ஒக்லஹோமாவில் 4 பேர் பலி

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

SCROLL FOR NEXT