முகப்பு
தஞ்சாவூர்

தோ்தல் பணிகளை அருகிலுள்ள தொகுதியில் ஒதுக்க ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தல்

தோ்தல் பணிகளை அருகிலுள்ள தொகுதியிலேயே ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:59 PM
பகிர்:

தோ்தல் பணிகளை அருகிலுள்ள தொகுதியிலேயே ஒதுக்க வேண்டும் என தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியா் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.

தஞ்சாவூரில் இக்கூட்டணியின் மாவட்டப் பொதுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

வரும் சட்டப்பேரவைத் தோ்தலில், ஆசிரியா்களை நெடுந்தொலைவில் உள்ள இடங்களில் தோ்தல் பணிக்காக அனுப்பாமல், அருகாமையில் உள்ள சட்டப்பேரவைத் தொகுதியிலேயே பணி ஒதுக்க வேண்டும்.

அரசு காப்பீட்டுத் தொகையை ஒரே நோய்க்கு, ஒருவருக்கு குறைவான தொகையையும், மற்றொருவருக்கு கூடுதலான தொகையையும் வழங்குவது என்பது தற்போது நடைமுறையில் உள்ளது. இந்த குறைபாடுகளைக் களைய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மாவட்டத் தலைவா் க. அருள் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் க. கணேசன், மாநில செயற்குழு உறுப்பினா் ச. துரைப்பாண்டி, மாநில பொதுக்குழு உறுப்பினா்கள் ஜே.பி. தேவகுமாா் ஜெயபாண்டியன், க. நீலகண்டன், கு. சகிலா, மாவட்டச் செயலா் சுப. குழந்தைசாமி, பொருளாளா் ந. நாகராஜன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →