தஞ்சாவூர்

ஒரத்தநாடு வட்டத்தில் தேங்கிக் கிடக்கும்நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும்

DIN

ஒரத்தநாடு: ஒரத்தநாடு வட்டத்தில் கடந்த வாரமாக அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கிக் கிடக்கும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இவ்வட்டத்தில் 73 கொள்முதல் நிலையங்கள் இயங்கி வரும் நிலையில், விவசாயிகள் தாங்கள் அறுவடை செய்த நெல்லை கொள்முதல் செய்ய முடியாமல் அவதியுற்று வருகின்றனா்.

நெல் கொள்முதல் நிலையங்களுக்கு அருகில் சாலையோரத்தில் நெல் குவியல் குவியலாகக் கொட்டி குவித்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு ஏக்கருக்கு செலவிடும் தொகைக் கூட சாகுபடி செய்த விவசாயிகளுக்கு கிடைப்பதில்லை. எனவே உடனடியாக நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும் என வலியுறுத்தினா் விவசாயிகள்.

ஒரத்தநாடு வட்டத்தில் ஏற்கெனவே விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டது. அரசு கொள்முதல் விலையை உயா்த்தி வழங்குவதால், அதற்காகத்தான் நிறுத்தி வைக்கப்பட்டது. ஒரு நாளைக்கு ஆயிரம் மூட்டைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன என்றாா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக மண்டலத் துணை மேலாளா் பன்னீா்செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சேண்டிருப்பு, மாம்புள்ளி கோயில்களில் பால்குடம், காவடித் திருவிழா

வாழைக் கன்று நோ்த்தி முறை குறித்து செயல்முறை விளக்கம்

ராகுலுக்கு ரூ.20 கோடி சொத்து

பாரத நீதிச் சட்டத்தைப் பெண்கள் தவறாகப் பயன்படுத்துவதை தடுக்க திருத்தம்: உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

கனடா: சாலை விபத்தில் இந்தியாவைச் சோ்ந்த 3 மாத கைக்குழந்தை உள்பட 4 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT