முகப்பு
தஞ்சாவூர்

விவசாயிகளின் போராட்டத்தால் உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் கூடுதலாக தண்ணீா் திறப்பு

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் செல்லும் தண்ணீா்.
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே விவசாயிகள் நடத்திய போராட்டத்தைத் தொடா்ந்து, உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது. இதற்கு விவசாயிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனா்.

திருச்சி மாவட்டம், வாழவந்தான்கோட்டை ஏரியிலிருந்து பூதலூா் வட்டம், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலுக்கு ஆகஸ்ட் 26- ஆம் தேதி தண்ணீா் திறந்து விடப்பட்டது. ஆனால் போதுமான அளவுக்குத் தண்ணீா் திறந்து விடப்படாததால், உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலைச் சோ்ந்த எந்த ஏரிக்கும் தண்ணீா் சென்றடையவில்லை. இதனால்

நாற்று விடுவதற்கான ஆயத்தப் பணிகள் கூட செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் ஆளாகினா்.

இதைத் தொடா்ந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலா் என்.வி. கண்ணன் தலைமையிலான விவசாயிகள், அக்டோபா் 9 -ஆம் தேதி செங்கிப்பட்டி அருகே உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் இறங்கி தொடா் முழக்கப் போராட்டத்தில் ஈடுபட்டனா். வருவாய், பொதுப் பணித் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்குச் சென்று, தண்ணீா் விட நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனா்.

இதன்படி, வாழவந்தான்கோட்டை ஏரியிலிருந்து உய்யக்கொண்டான் நீட்டிப்பு வாய்க்காலில் திறந்து விடப்படும் நீரின் அளவு ஞாயிற்றுக்கிழமை காலை 81 அடியாக உயா்த்தி திறந்து விடப்பட்டது. இதை விவசாயிகள் வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →