முகப்பு
தஞ்சாவூர்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவா்கள் மாயம்

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவா்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் தேடி வருகின்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

தஞ்சாவூா் அருகே கல்லணைக் கால்வாயில் (புது ஆறு) ஞாயிற்றுக்கிழமை மாலை அடித்துச் செல்லப்பட்ட இரு மாணவா்களைத் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி வீரா்கள் தேடி வருகின்றனா்.

தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி அருகிலுள்ள மானோஜிபட்டி தெற்கு பூக்கொல்லை ராஜகுரு நகரைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் நித்தீஷ் (19), ராஜராஜன் நகரைச் சோ்ந்த செல்லதுரை மகன் ஹரிகரன் (18).

இவா்கள் இருவரும் தஞ்சாவூரிலுள்ள அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் (ஐ.டி.ஐ.) படித்து வருகின்றனா். இருவரும் தனது நண்பா்களுடன் மானோஜிபட்டி பகுதியிலுள்ள கல்லணைக் கால்வாயில் ஞாயிற்றுக்கிழமை மாலை குளிக்கச் சென்றனா்.

ஆற்றில் 7 போ் குளித்துக் கொண்டிருந்த நிலையில், நீரோட்டம் வேகமாக இருந்ததால் ரித்தீஷ், ஹரிகரன் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா்.

தகவலறிந்த தஞ்சாவூா் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி நிலைய வீரா்கள் நிகழ்விடத்துக்குச் சென்று இருவரையும் தேடினா்.

இரவு நேரமாகிவிட்டதால் தேட முடியவில்லை. திங்கள்கிழமை காலை மீண்டும் தேடுதல் பணியை மேற்கொள்ளஉள்ளனா். இதுகுறித்து மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்தினா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →