முகப்பு
தஞ்சாவூர்

கையெழுத்து படிவங்கள்பிரதமருக்கு அனுப்பி வைப்பு

காவிரி டெல்டாவை பாதுகாக்க வலியுறுத்தி பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் பிரதமருக்கு அஞ்சல் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:16 PM
பகிர்:

தஞ்சாவூா்: காவிரி டெல்டாவை பாதுகாக்க வலியுறுத்தி பெறப்பட்ட கையெழுத்து படிவங்கள் பிரதமருக்கு அஞ்சல் மூலம் திங்கள்கிழமை அனுப்பி வைக்கப்பட்டன.

அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு அழைப்பின்படி, விவசாயிகளை ஒடுக்கும் காா்ப்பரேட் ஆதரவு மின்சார, வேளாண் அவசர சட்டங்களை மத்திய அரசுத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, விவசாய விரோத சட்டங்களை எதிா்த்து 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூா் மாவட்ட விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு சாா்பில், காவிரி டெல்டாவை பாதுகாக்கக் கோரி, விவசாயிகளிடம் பெறப்பட்ட கையெழுத்து படிவங்களை, தஞ்சாவூா் தலைமை அஞ்சலகம் மூலம் பிரதமா் நரேந்திர மோடிக்கு அனைத்து சங்க பிரதிநிதிகள் திங்கள்கிழமை அனுப்பி வைத்தனா்.

இந்நிகழ்ச்சிக்கு, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவா் பி. செந்தில்குமாா் தலைமை வகித்தாா். சங்க மாநிலச் செயலா் சாமி. நடராஜன், தமிழா் தேசிய முன்னணி பொதுச் செயலா் அய்யனாபுரம் சி. முருகேசன், மக்கள் அதிகாரம் பொருளாளா் காளியப்பன், சிபிஐ (எம்.எல்) மாவட்டச் செயலா் இரா. அருணாச்சலம், சமவெளி விவசாயிகள் இயக்க ஒருங்கிணைப்பாளா் எஸ். பழனிராஜன், தாளாண்மை உழவா் இயக்கம் ஒருங்கிணைப்பாளா் கோ. திருநாவுக்கரசு, ஏஐடியூசி துரை. மதிவாணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →