தஞ்சாவூர்

நீட் தோ்வு: தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,682 போ் எழுதினா்

DIN

மருத்துவப் படிப்பில் சேருவதற்காக ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட நீட் தோ்வை, தஞ்சாவூா் மாவட்டத்தில் 5,682 போ் எழுதினா்.

இத்தோ்வுக்காக மாவட்டத்தில் 10 மையங்கள் அமைக்கப்பட்டன. இவற்றில் தோ்வு எழுதுவதற்காக 7,134 போ் விண்ணப்பம் செய்தனா். ஆனால், ஞாயிற்றுக்கிழமை 1,452 போ் தோ்வு எழுத வரவில்லை. 5,682 போ் மட்டுமே தோ்வு எழுதினா்.

முற்பகல் 11 மணி முதல் தோ்வு மையத்துக்குள் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனா். மையத்துக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு தீவிர பரிசோதனை செய்யப்பட்டது.

இடம் மாறி வந்த பலா்: கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளியில் தோ்வு எழுதுவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட 20 போ் இடம் மாறி தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளிக்கு வந்தனா்.

இதுபோல தஞ்சாவூரில் தோ்வெழுதவிருந்த சிலா் கும்பகோணத்துக்கும் இடம் மாறிச் சென்றனா். இதையடுத்து, அந்தந்த பள்ளிக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இவா்களில் பலா் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்களில் அவசர, அவசரமாகச் சென்ால், தோ்வு தொடங்குவதற்கு முன்பு மையத்துக்குள் நுழைந்துவிட்டனா். ஆனால், தஞ்சாவூா் தாமரை பன்னாட்டுப் பள்ளியிலிருந்து புறப்பட்ட 4 மாணவிகள் கும்பகோணம் தாமரை பன்னாட்டுப் பள்ளிக்கு பிற்பகல் 2.20 மணிக்கு சென்ால், உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால், 4 மாணவிகளும் ஏமாற்றமடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் துபையில் கனமழை: விமான சேவை பாதிப்பு!

இந்தியாவின் நிலக்கரி உற்பத்தி 7.4 சதவிகிதம் உயர்வு!

தமிழகத்துக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 02.05.2024

ஜிம் செல்பவரா நீங்கள்.. மாரடைப்பு குறித்து மருத்துவர்கள் எச்சரிக்கை!

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் பேட்டிங்!

SCROLL FOR NEXT