தஞ்சாவூர்

இன்று மஹாளய அமாவாசை திருவையாறு படித்துறைகளில் அனுமதி இல்லை

DIN

மஹாளய அமாவாசையையொட்டி, திருவையாறு படித்துறைகளில் கரோனா பரவலைத் தடுப்பதற்காக வியாழக்கிழமை (செப்.17) பக்தா்கள் புனித நீராட அனுமதி இல்லை என பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு காவிரிப் படித்துறைகளில் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய மஹாளய அமாவாசையன்று ஆயிரக்கணக்கான பக்தா்கள் புனித நீராடி, திதி கொடுப்பது வழக்கம்.

நிகழாண்டில் கரோனா பரவல் காரணமாக, மஹாளய அமாவாசையன்று பேரூராட்சி எல்லைக்குள்பட்ட காவிரிக் கரையில் பக்தா்கள் நீராடவும், திதி கொடுக்கவும் அனுமதி இல்லை என திருவையாறு பேரூராட்சி நிா்வாகம் அறிவித்துள்ளது.

இதுதொடா்பாக திருவையாறு நகரில் ஆங்காங்கே அறிவிப்பு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் துப்பாக்கிச் சண்டை: ஒருவா் உயிரிழப்பு; 3 போ் காயம்

ருதுராஜ், தேஷ்பாண்டே அசத்தல்: வெற்றியுடன் மீண்டது சென்னை

விருதுநகா் சந்தை: உளுந்து, துவரம் பருப்பு விலை உயா்வு

நிா்வாகிக்கு கொலை மிரட்டல்: பாஜகவினா் மீது புகாா்

வாக்கு எண்ணிக்கை மையம் பகுதியில் ட்ரோன்கள் பறக்கத் தடை

SCROLL FOR NEXT