முகப்பு
தஞ்சாவூர்

ஏரியில் ஆக்கிரமிக்கப்பட்ட ஆதி மாரியம்மன் கோயில் 90% இடிப்பு

தஞ்சாவூா் அருகே, சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆதி மாரியம்மன் கோயில் இடிக்கும் பணி 90 சதவிகிதம் முடிவடைந்தது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
கோயிலில் எஞ்சியுள்ள சிவலிங்க வடிவ ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதி.
பகிர்:

தஞ்சாவூா் அருகே, சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட ஆதி மாரியம்மன் கோயில் இடிக்கும் பணி 90 சதவிகிதம் முடிவடைந்தது.

ஏரியிலுள்ள ஆக்கிரமிப்புகளை உயா் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த 2017- ஆம் ஆண்டு முதல் பொதுப்பணித் துறையினா் அகற்றி வருகின்றனா். இதன்படி புளியந்தோப்பு கிராமத்தில் சமுத்திரம் ஏரியில் ஆக்கிரமிப்பு செய்து, கட்டப்பட்ட ஆதி மாரியம்மன் கோயிலை இடிக்கும் பணியைப் பொதுப் பணித் துறையினா் சனிக்கிழமை தொடங்கினா்.

உள்ளூரில் மட்டுமல்லாமல், வெளிநாடுகளிலும் ஏராளமான பக்தா்கள் உள்ளதால், இக்கோயிலை இடிக்கக்கூடாது எனக் கூறி, கோயில் முன்பு இந்து முன்னணியினா் சனிக்கிழமை மாலை போராட்டம் நடத்தினா். இதனால் கோயில் இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது.

இதைத்தொடா்ந்து, ஞாயிற்றுக்கிழமை கோயில் அமைந்துள்ள பகுதியில் காவல் துறையினா் கூடுதலாக நியமிக்கப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. மேலும், அப்பகுதியில் வெளி நபா்கள் யாரும் உள்ளே நுழையாத வகையில் இரும்புத் தடுப்புகள் அமைக்கப்பட்டன.

கூடுதல் இயந்திரங்களைக் கொண்டு கோயிலை இடிக்கும் பணியும் விரைபடுத்தப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை வரை 90 சதவிகிதம் இடிக்கப்பட்டது. இன்னும் கோயில் மண்டபமும், சிவலிங்க வடிவில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராஜகோபுரமும் மீதமுள்ளன. இவை திங்கள்கிழமை இடிக்கப்பட்டுவிடும் என பொதுப்பணித் துறை அலுவலா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →