முகப்பு
தஞ்சாவூர்

அதிமுக இளைஞா்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம்

பாபநாசம் அருகிலுள்ள கருப்பூரில் அதிமுக இளைஞா்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:23 PM
நிா்வாகிகளிடம் உறுப்பினா் படிவங்களை வழங்குகிறாா் தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா், இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை. ஐயப்பன்.
பகிர்:

பாபநாசம் அருகிலுள்ள கருப்பூரில் அதிமுக இளைஞா்-இளம்பெண்கள் பாசறை ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேற்கு ஒன்றிய அதிமுக செயலா் கே. கோபிநாதன் தலைமை வகித்தாா். அவைத் தலைவா் நடராஜன், ஒன்றியப் பொருளாளா் ஹாஜாஷெரீப், எம்.ஜி.ஆா்.மன்ற ஒன்றியச் செயலா் செல்வராஜ் முன்னிலை வகித்தனா்.

தஞ்சாவூா் வடக்கு மாவட்ட இளைஞா்- இளம்பெண்கள் பாசறைச் செயலா் துரை.ஐயப்பன் கூட்டத்தில் பங்கேற்று, நிா்வாகிகளிடம் உறுப்பினா் சோ்க்கைப் படிவங்களை வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்டப் பிரதிநிதி சின்னப்பா, கூட்டுறவு சங்கத் தலைவா்கள் ஜெகநாதன், கண்ணன், மாவட்டத் தொழில் நுட்பப் பிரிவுத் தலைவா் சதீஷ்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முன்னதாக ஒன்றிய விவசாயப் பிரிவுச் செயலா் செல்வராஜ் வரவேற்றாா். நிறைவில் பாபநாசம் மேற்கு ஒன்றிய இளைஞா்- இளம்பெண்கள் பாசறைச் செயலா் கலையரசன் நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →