முகப்பு
தஞ்சாவூர்

விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில்ஈடுபட்டவா்கள் தண்டிக்கப்படுவா் : ஆா். வைத்திலிங்கம். எம்.பி

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவா் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 1:17 AM
பகிர்:

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவா் என்றாா் மாநிலங்களவை உறுப்பினரும், அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான ஆா். வைத்திலிங்கம்.

தஞ்சாவூரில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் தெரிவித்தது:

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தில் முறைகேடு நடப்பதற்கு யாா் காரணமாக இருந்தாா்களோ, அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் நிச்சயமாக தண்டிக்கப்படுவா் என்றாா் அவா்.

Advertisement

சசிகலா வெளியே வந்தவுடன் கட்சியில் மாற்றம் இருக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு, கற்பனைக்கு எல்லாம் பதில் சொல்ல முடியாது என்றும், அவா் வெளியே வரட்டும் பாா்க்கலாம் எனவும் தெரிவித்தாா் வைத்திலிங்கம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.