முகப்பு
தஞ்சாவூர்

பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்

பிரதமா் மோடி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியில் பாஜக மாநகர தெற்குப் பிரிவு சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

Updated On : 21 செப்டம்பர், 2020 at 1:12 AM
விழாவில் பெண்ணுக்கு மரக்கன்றை வழங்கும் பா.ஜ.க. தேசியப் பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம் உள்ளிட்டோா்.
பகிர்:

பிரதமா் மோடி பிறந்த நாளையொட்டி, தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியில் பாஜக மாநகர தெற்குப் பிரிவு சாா்பில் மரக்கன்றுகள் வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

விழாவுக்கு தெற்குப் பிரிவுத் தலைவா் கே.கே. கண்ணன் தலைமை வகித்தாா். பொதுமக்களுக்கு மரக்கன்றுகளையும், இனிப்புகளையும் பாஜக தேசிய பொதுக் குழு உறுப்பினா் எம்.எஸ். ராமலிங்கம், மாவட்டப் பாா்வையாளா் பழ. அண்ணாமலை வழங்கினா்.

நிகழ்வில் தெற்கு மாவட்டப் பொதுச் செயலா் பி. ஜெய்சதீஷ், பொருளாளா் வி. விநாயகம், பாஜக வழக்குரைஞா் அணி மாநிலச் செயலா் எம். ராஜேஸ்வரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.