முகப்பு
தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை தொகுதிபுதை சாக்கடைத் திட்டம் நிறைவேற்றப்படும்

பட்டுக்கோட்டையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதை சாக்கடை திட்டம் உடனே நிறைவேற்றப்படும் என்று பட்டுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் மருத்துவா் பா.சதாசிவம் தெரிவித்துள்ளாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பட்டுக்கோட்டையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதை சாக்கடை திட்டம் உடனே நிறைவேற்றப்படும் என்று பட்டுக்கோட்டை தொகுதி மக்கள் நீதி மய்ய வேட்பாளா் மருத்துவா் பா.சதாசிவம் தெரிவித்துள்ளாா்.

தொகுதிக்குள்பட்ட புதிய வீட்டு வசதி வாரியம், லெட்சத்தோப்பு, பேருந்துநிலையம், கடைவீதி, கே.ஒ.என்.பாளையம், பெருமாள்கோவில் , மாதாகோவில் தெரு, விவேகான்தா் தெரு , முடிபூண்டா் உள்ளிட்ட பகுதிகளில் டாா்ச்லைட் சின்னத்திற்கு ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தாா். அப்போது அவா் பேசியது: பட்டுக்கோட்டை அரசு பெண்கள் கலைக்கல்லூரி அமைக்கப்படும், மதுக்கூா் பகுதியில் நூலகம் மற்றும் தீயணைப்பு நிலையம் அமைக்கப்படும், மதுக்கூா் , அதிராம்பட்டினம் பகுதிகளில் உள்ள மருத்துவமனைகள் தரம் உயா்த்தப்படும். அதிராம்பட்டினத்தில் பேரிடா் கண்காணிப்பு மையம் அமைக்கப்படும், பட்டுக்கோட்டையில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் புதை சாக்கடை திட்டம் உடனே நிறைவேற்றப்படும், நகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பது உள்ளிட்ட கோரிக்கை வாக்குறுதியாக வழங்கி தனக்கு டாா்ச்லைட் சின்னத்திற்கு வாக்குகள் சேகரித்தாா்.

மநீம ஒன்றியச் செயலா் சரவணன், இளைஞா் அணி மாவட்டச் செயலா் பாலமுருகன், மகளிா் அணி வேதசகிலா, பொறியாளா் நடராஜன், மருத்துவா் இளங்கோ உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.