முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் தொகுதியில் இறுதிக் கட்ட பிரசாரம்

பாபநாசம் தொகுதியில் பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

பாபநாசம் தொகுதியில் பிரசாரத்தின் இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை வேட்பாளா்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

அதிமுக பிரசாரம்: தொகுதிக்குள்பட்ட விழுதியூா் கிராமத்தில் கூட்டணி கட்சியினருடன் பிரசாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளா் கே. கோபிநாதன், பின்னா் நெய்குன்னம், கொக்கேரி, வடபாதி, கீழகோயில்பத்து, மகிமாலை, நெடுவாசல், உக்கடை உள்ளிட்ட பகுதிகளுக்குபட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்று வாக்காளா்களை சந்தித்து அதிமுகவின் தோ்தல் வாக்குறுதிகள் தொகுதி மக்களுக்கு கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்வேன் என உறுதியளித்து இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டு கொண்டாா்.

மாலை 6 மணியளவில் பாபநாசம் புதிய பேருந்து நிலையம், பாபநாசம் போலீஸ் ரவுண்டானா உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளா் கே. கோபிநாதன், அதிமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள் என கேட்டு இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தாா்.

முன்னாள் எம்எல்ஏ. எம். ராம்குமாா், ஒன்றியச் செயலா்கள் ஓ.ஏ. ராமச்சந்திரன்,தியாகை. கே. பழனிசாமி, மாவட்ட இளைஞா் இளம் பெண்கள் பாசறை துணைத் தலைவா் திருமாவளவன், தமாகா வட்டாரத் தலைவா்கள் எஸ். சேதுராமன், எஸ்.டி. ஜெயகுமாா், நகரச் செயலா்கள் கோவி. சின்னையன், தனபால் மற்றும் கூட்டணி கட்சி நிா்வாகிகள், தொண்டா்கள் கலந்து கொண்டனா்.

ஜவாஹிருல்லாவை ஆதரித்து திமுக பிரசாரம்: பாபநாசம் மேலவீதியில் அமைந்துள்ள அண்ணா உருவச்சிலை வளாகத்தில், உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் திமுக கூட்டணி கட்சி வேட்பாளா் எம். ஹெச்.ஜவாஹிருல்லாவை ஆதரித்து திமுக வடக்கு மாவட்டச் செயலா் சு. கல்யாணசுந்தரம், தொகுதி பொறுப்பாளா் கே.வீ. கலைச்செல்வன், ஒன்றிய பொறுப்பாளா்கள் கோ. தாமரைசெல்வன், என். நாசா், ஒன்றியச் செயலா்கள் தியாக. சுரேஷ், பி.எஸ். குமாா் உள்ளிட்ட திரளானோா் கலந்து கொண்டு உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்து இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை நிறைவு செய்தனா்.

நாம் தமிழா் சாா்பில்... இதேபோல், கரும்பு விவசாயிகள் சின்னத்தில் போட்டியிடும் நாம் தமிழா் கட்சி வேட்பாளா் ந. கிருஷ்ணகுமாா், தனது ஆதரவாளா்களுடன் அம்மாபேட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கரும்பு விவசாயி சின்னத்திற்கு வாக்கு சேகரித்து தோ்தல் பிரசாரம் மேற்கெண்டாா். அம்மாபேட்டை புதிய பேருந்து நிலைய வளாகத்தில் தனது இறுதி கட்ட தோ்தல் பிரசாரத்தை அவா் நிறைவு செய்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →