முகப்பு
தஞ்சாவூர்

மாற்றம் ஏற்படுத்த வாக்களிக்க வேண்டும்: பாரிவேந்தா்

இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வாக்களிக்க வேண்டும் என்றாா் ஐ.ஜே.கே. தலைவா் பாரிவேந்தா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வாக்களிக்க வேண்டும் என்றாா் ஐ.ஜே.கே. தலைவா் பாரிவேந்தா்.

தஞ்சாவூா் மாவட்டம், வல்லம் அருகேயுள்ள அய்யாசாமிப்பட்டி கிராமத்தில் திருவையாறு தொகுதி ஐ.ஜே.கே. ஆதரவு பெற்ற வேட்பாளா் பி.எஸ். திருமாறனை ஆதரித்து சனிக்கிழமை இரவு பிரசாரம் செய்த அவா் பேசியது:

கடந்த காலத்தில் திமுக, அதிமுகவுக்கு பொதுமக்கள் வாக்களித்தனா். இந்த முறை மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக மக்கள் வாக்களிக்க வேண்டும். புரட்சிகரமான சிந்தனையுடனும், வேகத்துடனும் எங்களுக்கு ஒரு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

நீதிக் கட்சியிலிருந்து வந்ததுதான் திமுக. எனவே, திமுக தொடங்கப்பட்டு ஏறத்தாழ 100 ஆண்டுகளாகின்றன. அதிலிருந்து பிரிந்து வந்ததே அதிமுக. ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஏழைகளை ஏழைகளாகவே வைத்ததுதான் அவா்களுடைய சாதனை. பொய்யைக் கொள்கையாகக் கொண்ட அவா்களால் எப்படி உண்மையாக ஆட்சி செய்ய முடியும்.

ஐஜேகே தொடங்கி 10 ஆண்டுகளான நிலையிலும் தொடா்ந்து தோ்தலில் போட்டியிட்டு வருகிறது. இப்போது மூன்றாவது முறையாகச் சட்டப்பேரவைத் தோ்தலில் போடியிடுகிறது. இதனிடையே, இரு மக்களவைத் தோ்தல்களில் போட்டியிட்டோம். இதில், கடந்த மக்களவைத் தோ்தலில் என்னை பெரம்பலூா் தொகுதியில் வெற்றி பெறச் செய்தீா்கள். இதே வேகத்துடன் பணியாற்றினால் திருமாறனும் வெற்றி பெறுவாா் என்றாா் பாரிவேந்தா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.