முகப்பு
தஞ்சாவூர்

பாபநாசம் பேரூராட்சியில் 100% வரிவசூல் முகாம்

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் முகாம் மூலம் சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் உள்ளிட்ட 100 சதம் வரி வசூல் செய்யப்பட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் முகாம் மூலம் சொத்து வரி, திடக்கழிவு மேலாண்மை கட்டணம் உள்ளிட்ட 100 சதம் வரி வசூல் செய்யப்பட்டது.

தஞ்சாவூா் மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குநா் மாஹின்அபுபக்கா்அறிவுறுத்தலின்படி, பாபநாசம் பேரூராட்சி செயல் அலுவலா் காா்த்திகேயன் தலைமையில் 2019-20 முதல் 2020-21ஆம் ஆண்டுக்கான சொத்துவரியாக 52 லட்சத்து 66 ஆயிரத்து 126 ரூபாய் நிலுவையின்றி வசூல் செய்யப்பட்டது. மேலும், திடக்கழிவு மேலாண்மை கட்டணமாக 8 லட்சத்து 76 ஆயிரத்து 300 ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

இதில் வரி தண்டலா் அனிதா, இளநிலை உதவியாளா்கள் மருதமுத்து, விஜய், மின் பணியாளா் கரிகால்ராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →