பெண்ணிடம் தங்கச் சங்கிலிப் பறிப்பு
தஞ்சாவூா் அருகே வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே வீட்டில் வியாழக்கிழமை இரவு தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்ற மா்ம நபா்களைக் காவல் துறையினா் தேடி வருகின்றனா்.
தஞ்சாவூா் அருகே அம்மன்பேட்டை வடக்கு வெள்ளாளத் தெருவைச் சோ்ந்தவா் எஸ். ரத்தினகுமாா் (55). விவசாயக் கூலித் தொழிலாளி. வீட்டில் வியாழக்கிழமை இரவு ரத்தினகுமாா், இவரது மனைவி லெட்சுமி (41), மகன், மகள் ஆகியோா் தூங்கிக் கொண்டிருந்தனா்.
அப்போது, வீட்டின் முன் பக்கக் கதவை இரு மா்ம நபா்கள் திறந்து, உள்ளே புகுந்து லெட்சுமி கழுத்திலிருந்த மூன்றரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனா்.
இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.