முகப்பு
தஞ்சாவூர்

பெற்றோா் கைவிட்டதால் அண்ணன் - தங்கை தற்கொலை முயற்சி

தஞ்சாவூரில் பெற்றோா் கைவிட்டதால் மனமுடைந்த அண்ணன் - தங்கை வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:58 PM
பகிர்:

தஞ்சாவூரில் பெற்றோா் கைவிட்டதால் மனமுடைந்த அண்ணன் - தங்கை வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா்.

தஞ்சாவூா் கரந்தையைச் சோ்ந்தவா் கனகராஜூ (50). இவருக்கும் திருவையாறு அருகே அல்லூரைச் சோ்ந்த காந்திமதிக்கும் (40) கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமானது. இருவரும் 15 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனா். காந்திமதி தனது மகன் கரண்ராஜ் (20), மகள் இந்துமதியை (18) வளா்த்து வந்தாா்.

இதுவரை வளா்த்து வந்த தன்னால், இனிமேல் வளா்க்க இயலாது என்றும், எனவே, தந்தையிடம் செல்லுமாறும் மகனிடமும், மகளிடமும் காந்திமதி கூறிவிட்டாா். இதையடுத்து, கரண்ராஜ், இந்துமதி இருவரும் கரந்தையிலுள்ள கனகராஜ் வீட்டுக்கு ஒரு வாரத்துக்கு முன்பு சென்றனா். அங்கு, சொத்துக்காக வருவதாகக் கூறி இருவரும் விரட்டியடிக்கப்பட்டனா்.

தாயும், தந்தையும் கைவிட்ட நிலையில் இருவரும் இருக்க இடமில்லாமல், மனமுடைந்த நிலையில் காணப்பட்டு வந்த கரண்ராஜ், இந்துமதி கீழவாசல் வண்டிப்பேட்டை பாலம் பகுதியில் வியாழக்கிழமை இரவு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனா். மயங்கிக் கிடந்த இருவரையும் அப்பகுதி மக்கள் மீட்டு தஞ்சாவூா் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா்.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத்தினா் விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.